Saturday, 4 December 2021
Tuesday, 14 April 2020
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அமிழ்தம் மின்னிதழ் மற்றும் சுதாரவி நாவல்ஸ் இணைந்து நடத்திய குறுந்தொடர் போட்டிக்கான முடிவுகளை வெளியிடுகிறோம். அதற்கு முன்பாக, போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துகளும், நன்றிகளும். பலரும் வெவ்வேறு களங்களில் உங்கள் பங்கை அளித்திருந்தீர்கள். உங்களது முயற்சிகள் தொடர எங்களது வாழ்த்துகள். குறிப்பாக, லாக்டௌன் நேரத்தில் அனைவருமே கூடுதல் சுமைகளும் பொறுப்புகளும் நேரத்திலும், நடுவர்களான திருமதி. சாரதா கிருஷ்ணன், எழுத்தாளர் திருமதி. மல்லிகா பூபாலசிங்கம் ரவி மற்றும் திருமதி உமா மனோஜ் அவர்களும், குறித்த காலத்திற்குள் தங்களது முடிவுகளை எங்களுக்கு அனுப்பி வைத்ததற்கு எங்களது நன்றிகளை உரித்தாக்குகிறோம். போட்டிக்கான கதைகளைத் தேர்ந்தெடுக்க நடுவர்கள் சற்றுச் சிரமப்பட்டிருப்பது அவர்கள் அனுப்பிவைத்த மதிப்பெண்களிலிருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது. கதைக்கான களம், நடை, எழுத்துப் பிழை, என்று ஒவ்வொன்றையும் தெளிவாக கவனித்துப் பிரித்து மதிப்பெண் இட்டு பரிசுக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். லாக்டௌன் காரணத்தால், போட்டியின் முடிவை சற்றுத் தாமதமாக அறிவிக்கலாமா என்று சிறு சஞ்சலம் இருந்தாலும், அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பங்கேற்பாளர்களுக்காக குறித்த நாளில் வெளியிட முடிவு செய்தோம். மூன்று பரிசுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாம் பரிசாக இருவருக்கு பரிசளிக்க வேண்டிய நிலை. அத்துடன் சிறப்பும் பரிசும் வழங்க வேண்டிய சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. இவை எதிர்பாராததாக இருந்தாலும், நம் எழுத்தாளர்களின் திறமைக்கான ஊக்குவிப்பாக இதை எடுத்துக் கொள்வோம். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டிக்கான முடிவுகள் இதோ... முதல் பரிசு வெற்றிவேல் - எழுத்தாளர் தீபிகா. இரண்டாம் பரிசு வஞ்சகம் தீர்ப்பேனடி - எழுத்தாளர் ஸ்ரீஷா மூன்றாம் பரிசு காகித மலரவள் - எழுத்தாளர் சாரா மோகன் & தீராக் காதல் நீயே - எழுத்தாளர் பிரியதர்ஷினி சிறப்புப் பரிசு காதல் சர்க்கஸ் - எழுத்தாளர் சுபஸ்ரீ பரிசுபெறும் எழுத்தாளர்களுக்கு எங்களது வாழ்த்துகள். லாக்டௌன் காரணத்தால் பரிசுகளை உடனே அனுப்பி வைக்க இயலாத காரணத்தால் சற்று தாமதமாகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். பங்கு பெற்ற அனைவரும், உங்கள் முகவரியை தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணுடன் amizhtham2020@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பரிசு பெற்றவர்கள் உங்கள் புகைப்படத்தையும், உங்களைப் பற்றிய குறிப்பு ஒன்றையும் போட்டிக்க எழுதிய கதையை டாக்குமெண்டாகவும் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
Sunday, 10 March 2019
Saturday, 15 September 2018
அமிழ்தம் மின்னிதழ் 6
அமிழ்தம் அரையாண்டு இதழை கதைகள் சிறப்பிதழாக கொண்டு வந்திருக்கிறோம். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
https://en.calameo.com/account/private/read/#code-001120786adbe316badbe
https://en.calameo.comhttps://en.calameo.com/account/private/read/#code-001120786adbe316badbe
அமிழ்தம் அரையாண்டு இதழை கதைகள் சிறப்பிதழாக கொண்டு வந்திருக்கிறோம். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
https://en.calameo.comhttps://en.calameo.com/account/private/read/#code-001120786adbe316badbe
Friday, 31 August 2018
Saturday, 28 July 2018
அமிழ்தம் மின்னிதழ் மலர் - 4
அமிழ்தம் மின்னிதழ் மலர்-4
For slow internet connection, please click the below link
To read in Calameo:-
‘நட்பு என்பது வரம்!’
இதை எங்கள் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
நம் உள்ளுக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கவும், அந்த வடிவம் முழுமை பெறவும் இந்த நட்புகளின் பங்களிப்புகள் எங்கள் வாழ்க்கையில் மறக்கவியலாத அழகிய உறவாக அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!
அமிழ்தம் மின்னிதழ் உருவானதும் எங்களது நட்பால். அதன்மூலமாக உருவான கலைச் சாரல் படைப்பாளர் – வாசகர்களுக்கு ஒரு பாலம் அமைக்க முயன்று கொண்டிருப்பதும் ஒரு தோழமையால்.
மின்னிதழுக்காக ஒரு தளம் அமைத்திருந்த போதும், சில அலுவல்களாலும், நெருக்கடிகளாலும் எங்களால் அதை வடிவமைக்க போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை.
ஆனால், தனது அலுவல்கள் அனைத்தையும் எங்களுக்காக ஒதுக்கிவைத்துவிட்டு பார்வைக்கு அழகாக, அனைவரும் சுலபமாகக் கையாளக் கூடிய வகையில் அழகுற அமைத்துக் கொடுத்த திருமிகு காம்கேர். கே. புவனேஸ்வரி மேடமிற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் எங்கள் அன்பை சொல்லிவிட முடியாது.
ஆரம்பம் முதலே எங்களது ஒவ்வொரு செயலுக்கும் ஊக்கமும், ஆக்கமுமாக இயங்கி வரும் திருமிகு காம்கேர். கே. புவனேஸ்வரி மேடமிற்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி மேடம்!
இதோ, புதியதொரு தளத்தில் தாமதமாக வந்தாலும், உங்கள் மனத்தைக் கவர வந்துவிட்டது நமது அமிழ்தம் 4ம் மலர். உங்கள் கருத்துப் பகிர்வுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.
நன்றி!அமிழ்தம் மின்னிதழ் மலர்-4
For slow internet connection, please click the below link
To read in Calameo:-
Monday, 18 June 2018
அமிழ்தம் மின்னிதழ் மலர் 3
செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும்’ என்றார் நபிகள் பெருமான்.
பெரிதினும் பெரிது கேட்டு வந்த எங்களை மேலும் மேலும் தொடுவானை நோக்கி இட்டுச் செல்லும் இறைவனுக்கு எங்கள் நன்றிகள்.
சிருஷ்டியின் அமிழ்தமாக மலர்ந்த நம் மின்னிதழின் உடன்பிறப்பாக, கலைச்சாரல் என்ற படைப்பாளர் – வாசகர் என்ற அமைப்பும் தற்போது உருவாகி வளர்ந்து வருகிறது.
வாசகர்களாகிய உங்களது பங்களிப்பால் சென்ற மாதம் முதல் நிகழ்வு பெரும் நிறைவாக நடந்து முடிந்தது.
நம்மைச் சூழ்ந்திருக்கும் நட்புலகின் அன்பில் திளைத்துக் கொண்டே, அடுத்த கலைச் சாரலின் நிகழ்ச்சிக்காக துரிதமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
உங்களின் மனம் நிறைந்த வாழ்த்தும், ஆதரவும், பங்கும் இந்த அமைப்பை மேலும் சிறப்படையச் செய்யும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது தான் ஆரம்பித்தது போன்று இருக்கிறது அதற்குள் நம் காலாண்டு சிறப்பிதழ் தயாராகி உங்கள் அனைவரின் பார்வைக்காகவும் காத்திருக்கிறது.
அன்பான உங்கள் வார்த்தைக்காக, உரிமையான உங்கள் கட்டமைக்கும் கருத்திற்காக, ஆசையுடன் பங்குபெற எங்களை அனுதினமும் அணுகிக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களின் பங்களிப்பிற்காக, எதிர்பார்த்துக்கொண்டும், புதுப்புது விஷயங்களை உங்களிடம் சேர்க்கும் எண்ணவோட்டத்துடனும் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
நம் எண்ணங்களின் கூட்டமைப்பால், சீரிய எழுத்துக்களாலும் நம் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையுடன்….
கீழே உள்ள கொழுவியை(Link) சொடுக்கவும் ..
Friday, 18 May 2018
அமிழ்தம் மின்னிதழ் மலர் 2
வணக்கம்.
அளப்பரிய அன்பில் தோய்ந்து, இந்த இதழைக் கொண்டு வந்திருக்கிறோம். இரு கரம் நீட்டி வரவேற்று, உங்களுடன் ஒருவராக எங்களை ஏற்றுக்கொண்டதில் மகிழ்கிறோம். உரிமையுடன் என்ன,என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றிகள் பல. அந்த மாற்றங்களை இந்த இதழிலேயேக் கொண்டு வந்திருக்கிறோம்.
சிருஷ்டி இதழ், "அனைத்தும் அனைவருக்காகவும்” உருவாக்கப்பட்டது என்பது உண்மை என்று உங்களின் கருத்துக்களின் மூலம் தெரிந்துக் கொண்டோம். எப்பொழுதும் சிருஷ்டி இதே தரத்துடன் உங்கள் கண்களுக்கு முன் மலரும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.
இதே ஆதரவைத் தொடர்ந்து எங்களுக்குத் தரவேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
சிருஷ்டி இதழ், "அனைத்தும் அனைவருக்காகவும்” உருவாக்கப்பட்டது என்பது உண்மை என்று உங்களின் கருத்துக்களின் மூலம் தெரிந்துக் கொண்டோம். எப்பொழுதும் சிருஷ்டி இதே தரத்துடன் உங்கள் கண்களுக்கு முன் மலரும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.
இதே ஆதரவைத் தொடர்ந்து எங்களுக்குத் தரவேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
Friday, 13 April 2018
சிருஷ்டி மின்னிதழ் மலர் 1
சிருஷ்டி மின்னிதழ் உங்கள் பார்வையில் இன்று முதல். இந்த இதழுக்காக, படைப்புகளை கேட்டவுடன் அனுப்பிவைத்த அத்தனை பேர்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது.இருப்பினும் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிரபலமானவர்கள், புதியவர்கள் என அனைவருமே எவ்வித கேள்வியும் கேட்காமல், எங்களுடன் கைகோர்த்து இந்த இதழுக்கு குறித்த நேரத்தில் தங்கள் படைப்புக்களை அனுப்பி, நாங்கள் இந்த இதழை விரைவில் கொண்டு வர உதவினார்கள்.
புதிய இதழ் உங்கள் அத்தனை பேரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில் கொண்டு வந்திருக்கிறோம். உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவே, நாங்கள் அடுத்த அடியினை எடுத்து வைக்க உதவும்.
சார்பற்று அனைத்துத் தளத்திலும் இயங்கவே விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களையும் எங்களுக்கு அனுப்புங்கள். பகிர்வதற்கான தளத்தை நாங்கள் வடிவமைத்து உங்கள் கண்முன் வைத்திருக்கிறோம். வாழ்வு எப்பொழுதும் சிறந்ததை நோக்கி பயணிக்கட்டும்.. உங்களோடு நாங்களும் கைக்கோர்த்து செல்லத் தயாராக இருக்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)