கலைச்சாரல் நிகழ்ச்சி

படைப்பாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எப்போதும் ஒரு பந்தம் தொடர்ந்துகொண்டே இருக்கும். படைப்பாளரின் ஒவ்வொரு படைப்பிலும், வாசகர்கள் தங்களை உணர்கின்றனர். அந்நிகழ்வில் தன்னைப் பொறுத்திக் கொண்டு மகிழ்கின்றனர்.
அப்படி தன்னுடைய நுண்உணர்வுகளை படம்பிடிக்கும் எழுத்துக்களில் வாசகர்கள் சங்கமித்துப் போகின்றனர். அந்த படைப்பாளியைத் தனது ஆதர்ச படைப்பாளியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
தனது வாழ்நாளில் ஒரு முறையாவது இவரைச் சந்தித்துப் பேச வேண்டும். அவரது ஆக்கத்தினால் நம் மனத்திலும், வாழ்க்கையிலும் உண்டான நிகழ்வுகளையும், சந்தோஷங்களையும், மனக்கிலேசங்களையும் அவரிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு ஆத்மார்த்த வாசகனுக்கும் தோன்றும்.
அப்படி எங்கள் மனத்தில் தோன்றிய வித்தின் வடிவமே, நாங்கள் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நம் சிருஷ்டியின் கலைச் சாரல் உருவாகக் காரணம்.
ஒவ்வொரு மாதமும் நான்காம் சனிக்கிழமை கன்னிமாரா பொது நூலகத்தில் நமது கலைச்சாரல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல், பல்துறை வித்தகர்கள் பலரின் சந்திப்பும், சிறப்புப் பயிற்சிப் பட்டறைகளும், போட்டிகளும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தாங்களும் அதில் பங்குபெற்று பயன்பெறுக. நன்றி!
பொறுப்பாசிரியர்கள்
ஷெண்பா , விஜய பானு