Friday, 18 May 2018

அமிழ்தம் மின்னிதழ் மலர் 2

வணக்கம். அளப்பரிய​ அன்பில் தோய்ந்து, இந்த​ இதழைக் கொண்டு வந்திருக்கிறோம். இரு கரம் நீட்டி வரவேற்று, உங்களுடன் ஒருவராக​ எங்களை ஏற்றுக்கொண்டதில் மகிழ்கிறோம். உரிமையுடன் என்ன​,என்ன​ மாற்றங்கள் செய்ய​ வேண்டும் என்று எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றிகள் பல​. அந்த​ மாற்றங்களை இந்த இதழிலேயேக் கொண்டு வந்திருக்கிறோம்.

சிருஷ்டி இதழ், "அனைத்தும் அனைவருக்காகவும்” உருவாக்கப்பட்டது என்பது உண்மை என்று உங்களின் கருத்துக்களின் மூலம் தெரிந்துக் கொண்டோம். எப்பொழுதும் சிருஷ்டி இதே தரத்துடன் உங்கள் கண்களுக்கு முன் மலரும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

 இதே ஆதரவைத் தொடர்ந்து எங்களுக்குத் தரவேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

 நன்றி.