சிருஷ்டி மின்னிதழ் உங்கள் பார்வையில் இன்று முதல். இந்த இதழுக்காக, படைப்புகளை கேட்டவுடன் அனுப்பிவைத்த அத்தனை பேர்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது.இருப்பினும் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிரபலமானவர்கள், புதியவர்கள் என அனைவருமே எவ்வித கேள்வியும் கேட்காமல், எங்களுடன் கைகோர்த்து இந்த இதழுக்கு குறித்த நேரத்தில் தங்கள் படைப்புக்களை அனுப்பி, நாங்கள் இந்த இதழை விரைவில் கொண்டு வர உதவினார்கள்.
புதிய இதழ் உங்கள் அத்தனை பேரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில் கொண்டு வந்திருக்கிறோம். உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவே, நாங்கள் அடுத்த அடியினை எடுத்து வைக்க உதவும்.
சார்பற்று அனைத்துத் தளத்திலும் இயங்கவே விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களையும் எங்களுக்கு அனுப்புங்கள். பகிர்வதற்கான தளத்தை நாங்கள் வடிவமைத்து உங்கள் கண்முன் வைத்திருக்கிறோம். வாழ்வு எப்பொழுதும் சிறந்ததை நோக்கி பயணிக்கட்டும்.. உங்களோடு நாங்களும் கைக்கோர்த்து செல்லத் தயாராக இருக்கிறோம்.