அனைவருக்கும் வணக்கம்!
சிருஷ்டியின் கலைச் சாரல் படைப்பாளர் – வாசகர் சந்திப்பு மூன்றாவது நிகழ்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இரண்டு நிகழ்வுகளையும் சிறப்பான முறையில் நடத்திக்கொடுத்த இறைவனுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், வாசக நட்புகளுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்!
இம்முறை பல சிறப்புகள் நம் நிகழ்ச்சியில் ஏற்பாடாகி உள்ளது. முதலாவதாக, கலைச் சாரல் நிகழ்ச்சியில் கடந்த 8 ஆண்டுகளாக குடும்ப நாவல்களை வெளியிட்டு வரும் சுபம் பப்ளிகேஷன்ஸ் அவர்களும் நம்முடன் இணைந்திருக்கின்றனர்.
அத்துடன் சிறப்பு விருந்தனராக 30 சென்னை வாழ் நாவல் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்று கூடி விழாவை சிறப்பிக்க உள்ளனர். அவர்கள்
அனைவருக்கும் எங்களது நன்றிகள்!
கலைச் சாரலின் மூன்றாவது நிகழ்வு 28 – 07 – 2018 அன்று கன்னிமாரா பொது நூலகம் மூன்றாம் தளத்தில் நடைபெற உள்ளது.
முடிந்தவரை சென்னை வாழ் பெண் எழுத்தாளர்களை ஒன்றுதிரட்டி விட்டோம் என்று நினைக்கிறோம். யாரையேனும் தவறுதலாக விடுபட்டிருந்தால் எங்களுக்கு உள்பெட்டியில் தெரியப்படுத்தவும்.
அவர்களையும், இதையே அழைப்பாக ஏற்று விழாவிற்கு வரும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் அபிமான எழுத்தாளர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் அரிய வாய்ப்பு. அவர்களிடம் ஏதேனும் கேள்விகள் கேட்க வேண்டுமா? உங்கள் மனம் திறந்து அவர்களிடம் பேச வேண்டுமா… இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வாருங்கள் தோழிகளே!
வர இயலாத தோழிகள் தங்கள் கருத்துக்களையோ, கேள்விகளையோ எங்களுக்கு
whatsapp 94431 42544, Srushti18k@gmail.com என்ற E -
mail முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். அவை உரிய எழுத்தாளரிடம் வழங்கப்படும்.