பெரிதினும் பெரிது கேட்டதும் தந்தருளி, இதுதான் பாதை, இதுவே பயணம் என்று வழிநடத்தும் இயற்கைக்கு நன்றி.
எப்பொழுதும் உடனிருக்கும் அத்தனை தோழமைகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் மீண்டும் ஒரு இனிய செய்தியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறோம்.
சிருஷ்டி குழுமமாக இன்று முதல் செயல்படத் துவங்குகிறோம். சிருஷ்டி குழுமத்திலிருந்து, "கலைச்சாரல்" - படைப்பாளர்-வாசக சந்திப்பிற்கு ஒரு பாலமாய் செயல்படும். உங்களின் மனங்கவர்ந்த படைப்பாளிகளை உங்களுடன் உரையாட வைக்க இதுவும் ஒரு தளமாக அமையும்.
கலைச் சாரலின் முதல் நிகழ்ச்சியாக, படைப்பாளர் - வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (மே 26, சனிகிழமை) கன்னிமாரா லைப்ரரியில் நடைபெற இருக்கிறது.
நம் மனதிற்கு நெருக்கமான எழுத்துக்களைப் படைத்து, எண்ணற்ற வாசகர்களின் நெஞ்சங்களில் தனி இடத்தைப் பிடித்திருக்கும் 'எழுத்தாளர்.திருமதி. வித்யா சுப்ரமணியம்' அவர்களுடனான ஒரு கலந்துரையாடல் வரும் 26 - ம் தேதி கன்னிமாரா பொது நூலகத்தில் நடைபெறும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்களையும், ஆலோசனைக் குழு மற்றும் சட்ட ஆலோசகர்களையும், வாசக - வாசகிகளையும் இருகரம் கூப்பி வரவேற்றோம்.
திருமிகு. காம்கேர் கே.புவனேஸ்வரி Compcare K Bhuvaneswari அவர்கள் முதல் வாழ்த்தாக இந்த நிகழ்ச்சிக்கு வண்ணமயமான அழைப்பிதழ் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்து எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்!