செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமையும்’ என்றார் நபிகள் பெருமான்.
பெரிதினும் பெரிது கேட்டு வந்த எங்களை மேலும் மேலும் தொடுவானை நோக்கி இட்டுச் செல்லும் இறைவனுக்கு எங்கள் நன்றிகள்.
சிருஷ்டியின் அமிழ்தமாக மலர்ந்த நம் மின்னிதழின் உடன்பிறப்பாக, கலைச்சாரல் என்ற படைப்பாளர் – வாசகர் என்ற அமைப்பும் தற்போது உருவாகி வளர்ந்து வருகிறது.
வாசகர்களாகிய உங்களது பங்களிப்பால் சென்ற மாதம் முதல் நிகழ்வு பெரும் நிறைவாக நடந்து முடிந்தது.
நம்மைச் சூழ்ந்திருக்கும் நட்புலகின் அன்பில் திளைத்துக் கொண்டே, அடுத்த கலைச் சாரலின் நிகழ்ச்சிக்காக துரிதமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
உங்களின் மனம் நிறைந்த வாழ்த்தும், ஆதரவும், பங்கும் இந்த அமைப்பை மேலும் சிறப்படையச் செய்யும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது தான் ஆரம்பித்தது போன்று இருக்கிறது அதற்குள் நம் காலாண்டு சிறப்பிதழ் தயாராகி உங்கள் அனைவரின் பார்வைக்காகவும் காத்திருக்கிறது.
அன்பான உங்கள் வார்த்தைக்காக, உரிமையான உங்கள் கட்டமைக்கும் கருத்திற்காக, ஆசையுடன் பங்குபெற எங்களை அனுதினமும் அணுகிக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களின் பங்களிப்பிற்காக, எதிர்பார்த்துக்கொண்டும், புதுப்புது விஷயங்களை உங்களிடம் சேர்க்கும் எண்ணவோட்டத்துடனும் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
நம் எண்ணங்களின் கூட்டமைப்பால், சீரிய எழுத்துக்களாலும் நம் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையுடன்….
கீழே உள்ள கொழுவியை(Link) சொடுக்கவும் ..